செய்திகள்

தென் கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் தென் கடற்பகுதியில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டின் ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.

அத்துடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என கூறப்படுகிறது.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன், இக் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

மேலும், புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 45-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் . இதன்போது, கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும் என குறிப்பிடப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com