உலகம்

தென் பங்களாதேஷில் அகதிகள் முகாம்கள் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி அறுவர் பலி!

தென் பங்களாதேஷில் உள்ள அகதிகள் முகாம்கள் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதில் ஆறு ரோஹிங்ய முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் சிறுவர்களும் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக பெய்து பருவ மழை காரணமாகவே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

குறித்த முகாம்கள் உள்ள பகுதிகளில் வெள்ளம் நிறைந்துள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொக்ஸ் பஸார் எல்லை பகுதியில் சுமார் ஒரு மில்லியன் ரோஹிங்ய மக்கள் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் எதிர்வரும் சில நாட்களுக்கு மழை தொடரும் என பங்களாதேஷ் வளிமண்டலவியல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மூங்கில் மற்றும் இலகுவில் உடையக்கூடிய கூடாரங்களிலேயே இந்த மக்கள் வாழ்ந்து வந்த நிலையில் இந்த வெள்ள நிலைமை அதனை மேலும் மோசமாக்கியுள்ளது.

Related Articles

Back to top button