செய்திகள்

தெமடகொட வெடிப்பு சம்பவத்தில் 3 காவற்துறை அதிகாரிகள் பலி!

தெமடகொடையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் உப காவற்துறை பரிசோதகர் உள்ளிட்ட 3 காவற்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெமடகொட மாவில பூங்காவிற்கு அருகில் வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தின் பின்னர் அங்கு சோதனைக்கு காவற்துறையினர் குழுவொன்று சென்றிருந்த வேளையில் இரண்டாவது வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது , உப காவற்துறை பரிசோதகர் ஒருவரும் மற்றும் இரண்டு காவற்துறை உத்தியோகத்தர்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.</div>

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com