செய்திகள்

தெரணியகல பகுதியில் பதட்டம், இரு இளைஞர்கள் காயம் ??

தெரணியகல நூரி தோட்டத்தில் வாக்களித்துவிட்டு வீடுதிரும்பும் போது மொட்டு ஆதரவாளர்களால் இருவர் தாக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞர்கள் வாக்களித்துவிட்டு வீடுதிரும்பும் போது யார்க்கு வாக்களித்தீர்கள் என கேட்டு குறித்த இளைஞர்களை தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

தாக்குதலுக்கு உள்ளான இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்  குறித்த பிரதேசத்தில் பதட்ட நிலைமை தொடர்வதோடு நூரி தோட்ட மக்கள் வாக்களிக்க செல்வதத்திற்கு பயந்து இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் குறித்த நபர்கள் இரவு வேளையில் லயன் குடியிருப்புகளை தாக்குவதாகவும் மிரட்டியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


மேலதிக விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button