...
செய்திகள்மலையகம்

தெரணியாகலவில் 11 வயது சிறுமி தொட்டில் சீலையில் சிக்குண்டு மரணம்.

கேகாலை மாவட்டம் தெரணியாகல பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாளிபொட தோட்டம் நிந்தகம பிரிவில் தொட்டிலில் சிக்கி 11வயதான சிறுமி மரணம் அடைந்துள்ளர்

தெரணியாகல மாளிபொட தோட்டம் நிந்தகம வசிப்பிடமாக கொண்ட திரு கேம் பிரிஸ் திருமதி நிசாந்தி அவர்களின் மூத்த மகளான 11 வயது
கெனோரீடா டில்மினி என்ற சிறுமி நேற்று மாலை 4 மணி அளவில் தனது வீட்டில் உள்ள தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தொட்டிலில் சிக்குண்டு மரணம் அடைந்துள்ளார்.

குறித்த சிறுமி தங்களுடைய இரண்டு சகோதரர்களுடன் ஒவ்வொரு நாளும் ஊஞ்சல் கட்டி விளையாடுவது வழக்கமாக கொண்டிருந்தார்.

நேற்றைய தினமும் மாலை 4 மணி அளவில் வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று அறை கதவினை மூடிக் கொண்டு தொட்டிலில் ஊஞ்சல் ஆடிக் கொண்டு இருந்துள்ளார். மற்றைய இரு சகோதரர்களும் அறையின் கதவு பூட்டியிருந்தது அறிந்து கதவினை தட்டியும் சிறுமி எந்தவித சத்தமும் இன்றி இருப்பதை அறிந்து தாயிடம் கூறியுள்ளனர்.

இதை அறிந்து விரைந்த தாய் கதவை தட்டியுள்ளார் கதவு திறக்காத நிலையில் வீட்டின் பின்புறமாக சென்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் குறித்த சிறுமி தொட்டில் சீலையில் சிக்குண்டு தொங்கிக் கொண்டிருந்ததை அறிந்து இரண்டாவது மகளை ஜன்னல் வழியாக அறைக்குள் இறக்கி விட்டு பின்பு கதவைத் திறந்ததும் தாய் வந்து பார்க்கும் சந்தர்ப்பத்தில் குறித்த சிறுமி தொட்டியில் தொங்கியவாறு மலம், சிறுநீர் சென்ற நிலையில் இருப்பதை கண்டுள்ளார்.

உடனடியாக பெற்றோர் தெரணியாகல பிரதேச வைத்தியசாலைக்கு குறித்த சிறுமியை கொண்டு சென்ற போது அங்கு வைத்தியர்கள் குறித்த சிறுமி மரணமடைந்துள்ளதாக தெரிவித்தனர். தற்போது சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தெரணியாகல பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது .

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெரணியாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen