தெரனியகலயில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை

தெரனியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சபுமல்கந்த தோட்ட பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்று சபுமல்கந்த தோட்டத்தின் மாஹின்கந்த பிரிவில் இடம்பெற்றுள்ளது.
குடிபோதையில் சென்ற 27 வயதுடய சந்தேகநபர் ஒருவர் 33 வயது எஸ்.ஜெயகாந்தன் என்ற ஒரு குழந்தையின் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபருக்கு எதிராக தெரனியகல பொலிஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற சாட்டுக்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த அன்று சந்தேகநபர் குடிபோதையில் வந்து கத்தியுடன் சுத்துவதாக தோட்ட மக்கள் பல முறை பொலிஸ் அவசர பிரிவிற்கு தொலைபேசி மூலம் அறிவித்த போதிலும் பொலிஸார் வரவில்லை என இந்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் கரவானெல்ல ஆதார வைத்தியசாலை பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபரை தெரனியகல பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவிஸ்சாவளை நீதிவான் நீதிமண்டபத்தில் ஆஜர் செய்யவுள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் குறித்து தெரனியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.