அரசியல்

தெரிவுக்குழு விசாரணையின் இடையே சட்டமா அதிபர் வௌியேறினார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது அவர், வழக்கு விசாரணைகள் இடம்பெறும் நேரத்தில் தான் சாட்சியமளித்தால் அது தனது கடமை சார்ந்த முரண்பாட்டை தோற்றுவிக்கும் என தெரிவித்தார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை என அனைவரையும் தான் பிரதிநிதித்துவபடுத்துவதாகவும் சாட்சி வழங்குவதால் குறித்த தரப்பினருக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாவதில் சிக்கல் நிலமை ஏற்படும் எனவும் இதன்போது சட்டமா அதிபர் தெரிவித்தார்.

அதனால் தெரிவுக்குழு முன்னிலையில் சட்டமா அதிபர் என்ற ரீதியில் தன்னால் சாட்சி வழக்குவதற்கு இணங்க முடியாது எனவும் தெரிவித்தார்.

இதன்போது சட்டமா அதிபர் தெரிவித்து கருத்துக்களை செவிமடுத்த நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் , தெரிவுக்குழுவை 15 நிமிடங்கள் ஒத்திவைத்தனர்.

மீண்டும் நாடாளுமன்ற தெரிவுக்குழு கூடியதோடு அந்த சந்தர்ப்பத்தில், இதற்கு முன்னர் சாட்சியமளிக்க வருகை தந்தவர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தை குறிவைத்து மேற்கொண்ட கருத்துக்கள் தொடர்பில் மாத்திரம் விசாரணை செய்ய எதிர்ப்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த சட்டமா அதிபர், அவை தொடர்பில் சாட்சியமளிக்க சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவரை முன்னிலைப்படுத்துவதாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் சட்டமா அதிபர் தெரிவித்ததற்கு அமைய , அதற்கு நடாளுமன்ற தெரிவுக்குழு அனுமதி வழங்கியது.

அதனையடுத்து சட்டமா அதிபர் தப்புலடி லிவேரா நாடாளுமன்ற தெரிவுக்குழுவிலிருந்து வௌியேறியதாக எமது விசேட செய்தியாளர் தெரிவித்தார்.

அதன்பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி அப்துல் மாலிஸ் அஸீஸ் ஆகியோர் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னினையில் ஆஜராகியிருந்தனர்.

Related Articles

Back to top button