ஆன்மீகம்கண்டிமலையகம்

தெல்தோட்டையில் ஆலய நிர்மான பனியில் மோசடியாம் பிரதமருக்கு கடிதம்..

ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மதங்களின் பங்கு முக்கியத்தவமானது அது எந்த மதமாகவும் இருக்கலாம். அந்த வகையில் மதங்ககளையும் மத சார்பான விடயங்களையும் மதஸ்தானங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டிய பொருப்பு எம் அனைவருக்கும் இருக்கின்றது. இவ்வாறு அபிவிருத்தி என்ற போர்வையில் தெல்தோட்டையில் மதஸ்தானம் ஒன்று பாதிக்கபட்டு வருவதையிட்டு செய்தியாக கொண்டு வருவதில் நாங்கள் கவலை அடைகின்றோம். இது மதத்திற்கோ அல்லது மதஸ்தானத்திற்கோ சேரு பூசும் நடவடிக்கை அல்ல.

தப்புக்கள் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காவும் மதங்கள் பாதுகாக்கபட வேண்டும் என்பதற்காவே.

தற்போது தெல்தோட்டையில் அமைந்துள்ள மிகவும் தொன்மையான ஒரு ஆலயம் ஒன்று புரணரமக்கப்பட்டு வருகின்றது.

அண்மை காலமாக இந்த ஆலயத்தின் நிர்மாண வேலையின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட ஆலய நிர்வாக சபையினர் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என கூறியும் இதiனால் சைவ மக்கள் பெரிதும் பாதித்து வருவதாகவும் இதனை உடனடியாக திருத்தி அமைப்பதற்கு பொருப்பாக இருக்கும் அமைச்சர் பிரதமர்  மஹிந்த ராஜபக்ச அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகோரியும் பிரதமருக்கு கடிதம் ஒன்று அனுப்பபட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
இந்த ஆலயம் இந்து கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு ஆலயமாகும்.

இந்த ஆலய நிர்மாண பனிக்கு நகர வர்த்தகர்கள்  பெருந்தோட்ட மக்கள்  அரசியல் பிரமுகர்கள் தனவந்தகர்கள் உட்பட பல்வேறு நன்கொடையாளர்கள் தங்களது நன்கொடைகளை பணமாகவும் பொருட்களாகவும் வழங்கி வருகின்றனர்.

இருந்தும் இந்ந பணம் முறையாக கையாளப்படவில்லை. பணத்திற்கான உரிய கணக்குகள் சமர்பிப்பாடவில்லை. பொருட்கள்; பாவனைக்கு உட்படுத்தாது கைவிடப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றது. இந்த ஆலயத்தின் நிர்மாண பனி பல வருடங்களாக முன்னெடுக்கபட்ட போதும் இது வரை பூர்த்தியாகவில்லை இதனால் இந்த பிரதேசத்தில் வாழும் பொது மக்கள் பெரிதும் பாதிப்டைந்து வருகின்றனர். 

தற்போது ஆலய வளாகம் கைவிடப்பட்டு  அமைக்கபட்ட  கட்டுமான பனிகளும் பாதிப்படைந்து வருகின்றது. என கூறி இந்த கடிதம் பிரதமருக்கு அனுப்பபட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேற்படி ஆலய பரிபான சபையின் தலைவர் சின்னையா சத்தியநாதன் அவர்களை தொடர்பு கொண்ட போது.  ஆலயம் ஒன்று கட்டுவது இழகுவான காரியமல்ல.

சில குறைபாடுகள் இருக்கதான் செய்கின்றது. இதனை நிவர்த்தி செய்வதற்கு போதுமான பணம் இல்லை. கிடைத்த உதவிகளை முiறாக பயன்படுத்தி உள்ளோம். தொடர்ந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம் என்று கூறினார்.

பொதுவாக மலையத்தில் ஆயிரகணக்கான கோவில்கள் இவ்வாறு உரிய திட்ட வரைபு இல்லாமல் உடைக்கபப்பட்டு பணம் போதைமையால் கைவிடபட்டு காணப்படுகின்றது. முதலில் தங்களிடம் இருக்கும் பணத்திற்கு ஏற்ப ஆலயத்தை அமைப்பதற்கு முயற்சிப்பதில்லை. இருந்த ஆலயத்தையும் உடைத்து விட்டு ஆலயமே இல்லாமல் மக்கள் இன்று பாதித்து வருகின்றனர். இந்து கலாச்சார அமைச்சு இதன் மேல் கவணம் எடுத்து ஆலயங்களை உடைப்பதில் தடைகளை கொண்டு வர வேண்டும். பணம் இருந்தால் உடைத்து கட்டலாம் என்ற நிலை உறுவாக வேண்டும். நன்றாக இருந்த கோவிலை உடைத்து நாசமாக்கிய நிலையை தடை செய்ய வேண்டும்.

பா.திருஞானம்

Related Articles

Back to top button