செய்திகள்பதுளைமலையகம்

தெஹிலந்த பகுதியில் 51 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

கஹட்டருப்ப பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெஹிலந்த பகுதியில் 51 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

மரணித்த நபர் கடந்த மாதம் 31 ம் திகதியில் இருந்து காணவில்லை என அவரின் மனைவியினால் கடந்த 2 ஆம் திகதி கஹட்டருப்ப பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் அவரது வீட்டில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் குறித்த நபரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த நபரின் சடலம் பதுளை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கஹட்டருப்ப பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Back to top button