செய்திகள்

தெஹிவளை கடற்பரப்பில் இனங்காணப்பட்ட கடற்சிங்கம் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழு..?

தெஹிவளை கடற்பரப்பில் இனங்காணப்பட்ட கடற்சிங்கம் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கடற்சிங்கத்தை வௌ்ளவத்தை கடற்கரை பகுதியில் இன்றும் காணக்கிடைத்ததாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடற்சிங்கத்திற்கு நோய்த்தாக்கம் காணப்படுவதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த விலங்கிற்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதை தவிர்க்குமாறு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Back to top button