செய்திகள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில், அனைத்து வசதிகளையும் கொண்ட விசேட வைத்தியசாலை

மிருகக்காட்சிசாலையிலுள்ள விலங்குகளுக்காக,அனைத்து வசதிகளையும் கொண்ட விசேட வைத்தியசாலையொன்று தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாடிகளை கொண்ட குறித்த வைத்தியசாலை எதிர்வரும் சில நாட்களில் திறக்கப்படவுள்ளது.

தேசிய மிருகக்காட்சி திணைக்களத்தின் விலங்குகள் நல பணிப்பாளர் சபை இதனை தெரிவித்துள்ளது.

அனைத்து விலங்குகளுக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பலத்த காயமடைந்த விலங்குகளை வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கும், அவற்றினை பரிசோதனை செய்வதற்கு ஏற்ற வகையில் க்ரென்ட் எனும் பெயரிலான விசேட இயந்திரமொன்றும் குறித்த வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலை திறக்கப்பட்டதன் பின்னர், சுற்றுலா பயணிகள் அதனை பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button