செய்திகள்

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் ஆண் சிங்கத்துக்கு கொரோனா

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் வசித்துவரும் சிங்கமொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆண் சிங்கமொன்றுக்கே இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்த சிங்கம் 3 நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தமையினால், மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளுக்கமைய, இருமல் மற்றும் தொண்டை நோவினால் சிங்கம் அவதிப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

அதன்பின்னர் சிங்கத்தின் சளி மாதிரி பேராதனை கால்நடை மருந்துவ பீடத்துக்கு அனுப்பப்பட்டு, அது தொடர்பான மேலதிக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்து, குறித்த சிங்கத்துக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது அந்த சிங்கம் மிருகக்காட்சி சாலையிலுள்ள ​​வேறொரு இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button