...
செய்திகள்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 33வது விளையாட்டு விழாவின் நுவரெலியாவில்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 33வது விளையாட்டு விழாவின் நுவரெலியா மாவட்ட  மட்ட விளையாட்டுப் போட்டிகள் நேற்றைய  தினம் 27 .11. 2021 நுவரெலியா மாநகர சபை மைதானத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமானது. ஒட்டுமொத்த போட்டிகளின் புள்ளிகள் அடிப்படையில் அம்பகமுவ பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் முதலாம் இடத்தையும். நுவரெலியா பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் இரண்டாம் இடத்தையும் கொத்மலை,வலப்பணை, ஹங்குராகெத்த பிரதேச  சம்மேளனகள் முறையே மூன்றாம் நான்காம் ஐந்தாம் இடங்களை தனதாக்கி கொண்டது . இதன்போது போட்டியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி எதிர்வரும் மாதம் சுகந்ததாச உள்ளக அரங்கில் இடம்பெற இருக்கும் தேசிய இளைஞர் விளையாட்டு  போட்டிகளுக்கு தெரிவாகிய அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும்  மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் செல்வராஜ் யோகப்ரியன் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் தெரிவித்தார்.
அத்தோடு  வெற்றியீட்டிய  பிரதேச சம்மேளனங்களுக்கும் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கு  சான்றிதழ்களும் வெற்றி கேடையங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில்  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்மாகாண பணிப்பாளர் , மாகாண கணக்காளர் ,நுவரெலியா மாவட்ட பணிப்பாளர் மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர் , மாவட்ட மற்றும் பிரதேச  விளையாட்டு பயிற்றுனர்கள்  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நுவரெலியா மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரிகள் ,பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரிகள் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன  தலைவர்,உறுப்பினர்கள்   மற்றும்  மாவட்ட இளைஞர்கள் யுவதிகளும் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen