செய்திகள்

தேசிய கடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் வாரத்தினை முன்னிட்ட தேசிய ரீதியிலான வேலைத்திட்டம்

சர்வதேச கடற்கரையை சுத்தப்படுத்தல் தினம் மற்றும் தேசிய கடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் வாரத்தினை முன்னிட்ட தேசிய ரீதியிலான வேலைத்திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வின் பிரதான நிகழ்வு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை – யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்கு அண்மையிலுள்ள கடற்கரையில் 23.09.2022 (இன்று) வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிமுதல் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட செயலாளர் .க.மகேசன் அவர்கள் கலந்துகொண்டமையுடன், சிறப்பு விருந்தினராக  திரு.சி.உமாபதி (முகாமையாளர் நிறுவனம்) அவர்கள் கலந்து சிறப்பிந்திருந்தார்.  நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், கடற்படையினர் மற்றும் அரச திணைக்கள அலுவலர்கள் கலந்துகொண்டிந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கடற்கரை தூய்மைப்படுத்தல் பணிகள் 19ஆம் திகதி யாழ் பண்ணை கடற்கரையிலும், 20ஆம் திகதி நெடுந்தீவு கடற்கரையிலும், 21ஆம் திகதி வல்வெட்டித்துறை நேதாஜி கடற்கரையிலும், 22ஆம் திகதி காரைநகரிலும், 23ஆம் திகதி புங்குடுதீவு கடற்கரையிலும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், கடற்படையினர் மற்றும் அரச அலுவலர்களின் பங்களிப்புடன் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்விற்கான நிதி அனுசரணையினை நிறுவனம் வழங்கியிருந்தனர்.

கடற்கரை தூய்மைப்படுத்தல் ஊடாக பொதுமக்கள் மத்தியில் பாரிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதுடன் கடல் வளத்தினை பேணும் வகையிலான கருத்துருவாக்கத்தினை மேற்கொள்ளும் வகையிலும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button