கல்விபதுளைமலையகம்

தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயின்று வெளிமாவட்ட பாடசாலைகளில் நியமனம் பெற்ற டிப்ளோமா தாரிகள் மீண்டும் ஊவா மாகாணத்தில் நியமனம் ?

தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயின்று வெளிமாவட்ட பாடசாலைகளில் நியமனம் பெற்ற டிப்ளோமா தாரிகள் மீண்டும் ஊவா மாகாணத்தில் நியமனம் பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது வரையிலும் வெளிமாவட்டங்களில் கடமைகளை பொறுப்பேற்காதவர்கள் உடனடியாக மத்திய கல்வி அமைச்சுக்கு வருகைதந்து தாம் பதவி ஏற்காமையினை கடிதம் மூலம் உறுதிப்படுத்தி ஊவா மாகாணத்திற்கான நியமனத்தை பெற முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஊவா மாகாண டிப்ளோமா தாரிகள் தொடர்பான தகவல்களை ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சு உரிய நேரத்தில் வழங்காமையின் காரணமாக அவர்களை வெளிமாவட்ட பாடசாலைகளுக்கு மத்திய கல்வி அமைச்சு நியமித்தது.

இதனை அடுத்து தம்மை சொந்த மாகாணத்தில் கடமைக்கு அமர்த்துமாறு 54 டிப்ளோமா தாரிகள் கல்வி அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட மேன் முறையீட்டு சபையில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இவர்களின் கோரிக்கைகளை செவிமடுத்த மேன்முறையீட்டு சபை இதில் உள்ள நியாயத்தை புரிந்துக்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் கல்வி அமைச்சுக்கு வருகைதந்து தாம் வெளிமாவட்ட பாடசாலைகளில் பதவி ஏற்காமையினை கடிதம் மூலம் உறுதிப்படுத்தி ஊவா மாகாணத்திற்கான நியமனத்தை பெற முடியும் என தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏற்கனவே வெளிமாவட்டங்களில் கடமையேற்ற ஆசிரியர்கள் தொடர்ந்தும் அந்த மாவட்டங்களிலேயே கடமையாற்ற வேண்டும் என கல்வி அமைச்சு தெரித்துள்ளது.

மேலும் வௌ;வேறு மாவட்டங்களில் இருந்து மேன்முறையீட்டு சபைக்கு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான முறைபாடுகளும் பரீசீலிக்கப்பட்டு அவற்றின் நியாயதன்மைக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கொறுத்தமற்ற முறையீடுகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது..

Related Articles

Back to top button
image download