சமூகம்

தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் இடமாற்றம் குறித்து அறிவித்தல்

எதிர்வரும் வருடத்திற்குரிய தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் இடமாற்றம் தொடர்பிலான சுற்றுநிரூபம் பாடசாலை அதிபர்களுக்கு அஞ்சலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து உயர்கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த இடமாற்றத்திற்குரிய ஆசிரியர்களின் பெயர் பட்டியலை www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடமாற்றத்திற்கு இணக்கம் காணப்படாத பட்சத்தில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னதாக அறியப்படுத்துமாறு உயர்கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button