...
செய்திகள்

தேசிய பெற்றோலிய மற்றும் வாயுக்கள் நிறுவனத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி

தேசிய பெற்றோலிய மற்றும் வாயுக்கள் நிறுவனத்தை நிறுவுவதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2011 தொடக்கம் 2013 வரைக்குமான காலப்பகுதியில் மன்னார் அகழி எம்.2 நிலப்பரப்பின் ஒரு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கமைய, இலங்கையில் பெற்றோலிய மற்றும் இயற்கை வாயுப் படிமம் காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பெற்றோலியப் பொருட்கள் மற்றும் இயற்கை வாயுக்களை உற்பத்தி செய்வதன் மூலம் உள்ளுர் தேவைகளுக்குச் சுவட்டு எரிபொருட்களின் நிறுவனங்கள்மீது தங்கியிருக்கும் நிலையைக் குறிப்பதற்கும், எதிர்காலத்தில் இயற்கை வாயு ஏற்றுமதியாளராக மாறுவதன் மூலம் அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொள்வதற்குமான வாய்ப்பு கிடைக்கும்.

வர்த்தக ரீதியான சாத்திய வளங்களுடன் கூடிய ஆராய்ச்சிகள் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இயலுமை கிடைக்கும் வகையில் உள்ளூர் வாயு ஆராய்ச்சி மற்றும் உற்பத்திகள் உள்ளடங்கலாக, களஞ்சியப்படுத்தல், குழாய்களைப் பொருத்துதல், போக்குவரத்து மற்;றும் விநியோகத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல், உரிமம் மற்றும் தொழிற்பாட்டு நடவடிக்கைகளுக்குரிய அரச – தனியார் பங்குடமையின் கீழ் தேசிய வாயுக்கள் நிறுவனம் ஒன்றை அரசாங்கத்தால் நிறுவுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென ‘இலங்கையில் இயற்கை வாயுக்கள் தொடர்பான தேசிய கொள்ளைப் பிரகடனத்தின்’ மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் நிர்வாக நிறுவனமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை நிறுவுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நிறுவனத்துக்கு 2021 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் 5 ஆம் பகுதியின் பிரகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகள் மற்றும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்குமான பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படும்.

அதற்கமைய, 2007 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் தேசிய பெற்றோலிய மற்றும் வாயுக்கள் நிறுவனத்தை நிறுவுவதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen