செய்திகள்

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம்

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைகளை பயணக்கட்டுப்பாடுகளின் கீழ் இன்று முதல் மீள ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. E – channeling ஊடாக நேரம் ஒதுக்கிக்கொண்டவர்களுக்கு மாத்திரம் இன்று முதல் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுவதாக நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சவிந்திர கமகே தெரிவித்துள்ளார்.

எனினும் வேரஹெர, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் களுத்துறை கிளைகளின் சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த கிளைகளில் நேரம் ஒதுக்கிக்கொண்ட சேவை பெறுனர்கள் மீண்டும் வருகை தரக்கூடிய நாள் மற்றும் நேரம் என்பன பின்னர் அறிவிக்கப்படும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button