செய்திகள்

தேசிய ‘ரணவிரு’ நினைவுத்தூபியில் உயிர்நீத்த போர் வீரர்களுக்கு நினைவஞ்சலி

நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்காக தங்கள் விலைமதிபுள்ள உயிர்களை தியாகம் செய்த இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையின் தேசபக்தி வாய்ந்த போர்வீரர்களை நினைவுகூரும் நிமித்தம் 12 ஆவது தேசிய போர் வீரர் தினத்தை முன்னிட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.

புதன்கிழமை (19) பிற்பகல் பத்தரமுல்லை தேசிய போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் இடம் பெறவுள்ள நிகழ்வில் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மற்றும் பிரதமர், மேல் மாகாண ஆளுநர், கடற்படை அட்மிரல், ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவத் தளபதி, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், ரணவிரு சேவா ஆணைய தவிசாளர் மற்றும் உயிர் நீத்த போர் வீரர்களின் உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முப்படை தளபதியின் வருகையின் பின்னர், இடம் பெறவுள்ள ரண விரு சேவா ஆணையம் ஏற்பாடு செய்துள்ள இந்த ஆண்டின் 12 வது தேசிய போர் வீரர்கள் நினைவு தினம் சுகாதார வழிகாட்டுதல்களைக் பின்பற்றி மாலை 4.00 மணிக்கு தொடங்குகிறது. பிரதம அதிதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொள்வதோடு பிரதமர் மற்றும் ஏனைய புகழ்பெற்ற அழைப்பாளர்கள் வருகை தரவுள்ளனர்.

இராணுவத்தின் போர் வீரர்கள் (23,962), கடற்படை (1160), விமானப்படை (443), 2598 பொலிஸார் மற்றும் 456 சிவில் பாதுகாப்புத் துறையினர்களுடன் மொத்தம் 28,619 பேர், 2009 மே மாத்த்திற்கு முன்னர் இடம்பெற்ற எல்டிடிஈ பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மிகச்சிறந்த உயிர் தியாகத்தை செய்தார்கள். இந்த தேசிய விழாவின் போது இலங்கையில் உள்ள அனைத்து இனத்தினராலும் அவர்களின் துணிச்சலான, விலைமதிப்பற்ற மற்றும் தன்னலமற்ற அர்ப்பணிப்பக்கு மரியாதைக்குரிய வகையில் நினைவுகூறப்படுகிறார்கள், இந்த தேசிய விழாவின் போது, தேசிய கீதம் பாடப்பட்டு அவர்களின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும், வீர உரை , மத சம்பிரதாயங்கள், ‘ரண பெர’ வாசித்தல், ஜனாதிபதியின் உரை, நினைவுச்சின்னத்தின் மீது விமானத்தில் இருந்து பூக்கள் பொலிவது உள்ளிட்ட நிகழ்வுகள் ஆகியவை இடம் பெறவுள்ளதுடன், ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர், செயலாளர்கள், முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் ஏனையவர்கள் மற்றும் உயிர் நீத்த போர் வீரர்களின் உறவினர்களும் விமானப்படையின் வானவழி பூக்களின் தூவிய சில நொடிகளில் பின்னர் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்துவார்கள் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

மாலை வேளையில், இராணுவ சம்பிரதாய முறைப்படி இடுகை மற்றும் ரெவில்லின் ஒலியுடன் நிகழ்வு நிறைவு பெறும், இது அனைத்து முப்படையினர்களின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com