செய்திகள்

தேரரின் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

கோட்டாபய ராஜபக்ஸிவின் பிரஜாவுரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரரினால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

பிரஜாவுரிமை தொடர்பில் விளக்கம் கோரி போதிலும் அவர் இலங்கை பிரஜையா, அல்லது அமெரிக்க பிரஜையா என்பது தொடர்பில் இதுவரை தமக்கு தெரிவிக்கப்படவில்லை என
கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸ நாட்டின் சிறந்த தலைவராக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தால், தாம் விடுத்த கோரிக்கை்கு அமைய, குறித்த பகுதிக்கு வருகை தந்தோ அல்லது அமெரிக்க தூதரகத்தினூடாகவோ தாம் இலங்கை பிரஜை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தேரர் வலியுறுத்தியுள்ளார்.

இன்று காலை முதல் நீராகரமும் இன்றி தாம் போராட்டத்தை தொடர்வதற்கும் தீர்மானித்ததாக கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button