அரசியல்
தேரவாத பௌத்த கோட்பாடுகளை பாதுகாத்து அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்
தேரவாத பௌத்த கோட்பாடுகளை பாதுகாத்து, அதனை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்வதற்கு அதன் பிராந்திய நாடுகளுடனும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வண.கொடகம மங்கல நாயக்க தேரர் நாட்டிற்கும் பௌத்த சாசனத்திற்கும் ஆற்றிவரும் சேவைகளையும் சர்வதேச ரீதியில் தேரவாத பௌத்த தர்மத்தை பரப்புவதற்காக மேற்கொள்ளும் சேவைகளையும் பாராட்டி தாய்லாந்து அரசாங்கத்தினால் ராஜகீய விருது வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று கண்டி அஸ்கிரிய ஸ்ரீ சந்திரானந்த பௌத்த வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவ்வாறு கூறியுள்ளார்.
வண.கொடகம மங்கல நாயக்க தேரருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது, அவருக்கு மட்டுமன்றி நாட்டிற்கும் கிடைத்த பெரும் கௌரவமாகும் என குறிப்பிட்டுள்ளார்.