அரசியல்செய்திகள்

தேர்தலில் இனவாதத்தை விற்க முஸ்லிம் தலைவர்கள் சிலர் முயற்சி?

தேர்தலில் இனவாதத்தை விற்க முஸ்லிம் தலைவர்கள் சிலர் முயற்சிக்கின்றனர். இவர்கள் அரசியல் விபச்சாரம் செய்கிறார்களா? அல்லது அரசியல் வியாபாரம் செய்கிறார்களா ? என்று மேல் மாகாண ஆளுநர் முஸம்மில் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை பிராந்திய முக்கியஸ்தர் அஹமட் புர்கான் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை இன்று தலைமைக் காரியாலயத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.

 எதிர்வரும் நாட்களில் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த நாட்டின் எதிர்காலத்திற்கும் விசேடமாக முஸ்லிம் மக்களுக்கு மிக முக்கியம் வாய்ந்த தேர்தலாகவே நான் கருதுகிறேன். பிரதானமாக கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரமதாச ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

இந்த 2 பேரில் யார் இந்த நாட்டை சரியாக கொண்டு செல்லக் கூடியவர் என்பதை நாம் உணர்ந்து தெரிவு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
image download