அரசியல்செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மற்றும் பலர் வாழ்த்து.

இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு  ஜனாதிபதி சிறிசேன வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்திய பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 19 ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் என்னும் பணி ஆரம்பமாகி  இடம்பெற்று வருகின்றது. இதில் பா.ஜ.க. 300 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்திய பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை தற்போது எழுந்துள்ளது.

இந்த நிலையிலே இலங்கை சார்பாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதேநேரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோரும் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தின் வழியாக தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
image download