அரசியல்செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட பாதுகாப்பு.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இன்றும் நாளையும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தை அண்மித்து விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே பொரளை, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு ஆகிய கல்வி வலயங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலயம் ,  ஹேவாவிதாரன வித்தியாலயம் மற்றும் ஹேவாவிதாரன கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றிற்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் நடவடிக்கை நாளை முன்னெடுக்கப்படவுள்ளதால் குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button