அரசியல்செய்திகள்

தேர்தல் தொடர்பில் அதிகரிக்கிறது முறைப்பாடுகள்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 97 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் குறித்த முறைபாடுகள் பதிவாகியுள்ளன.

கடந்த ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் நேற்று வரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இரண்டாயிரத்து 867 முறைபாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன.

வன்முறைகள் தொடர்பில் 24 முறைபாடுகள் தொடர்பிலும், சட்டத்தை மீறியமை தொடர்பில் 2 ஆயிரத்து 748 முறைபாடுகளும் ஏனைய 95 முறைபாடுகளும் பதிவாகியுள்ளன.

Related Articles

Back to top button
image download