செய்திகள்

தேர்தல் பொலிஸ் கடமைகளுக்கு பொறுப்பாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நியமனம்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் உடன் அமுலுக்கு வரும் வகையில் தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜெகத் அபேசிறி குணவர்தன சிரேஷ்ட பொலிஸ்மா அதிபராக மேல் மாகாண மற்றும் வாகன போக்குவரத்து மாவட்ட பொறுப்பாளருக்கு மேலதிகமாக தேர்தலுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Articles

Back to top button