சிறப்புநுவரெலியாமரண அறிவித்தல்

தைபொங்கல் நிகழ்வுகளுக்கு வலப்பனை பிரதேச சபை மூலம் நிதியொதுக்கீடு.

வெசாக் மற்றும் பொசன் நிகழ்வுகளுக்கு பிரதேச சபை மூலமாக நிதி ஒதுக்கீட்டுக்கான அங்கீகாரம் இன்றைய தினம் நடைபெற்ற வலப்பனை பிரதேச சபையின் வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்து பேசினர். இங்கு கருத்துரைத்த பிரதேச சபை உறுப்பினர் சுஜிகலா, வெசாக் மற்றும் பொசன் தினங்களை போன்று தைபொங்களும் ஒரு தேசிய நிகழ்வாகும். எனவே, மேற்கூறிய இரு நிகழ்வுகளுக்கு சபை மூலம் நிதி ஒதுக்கீடு செய்வதை வரவேற்கும் அதேவேளை, தைபொங்கல் நிகழ்வுக்கும் சபையின் மூலமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட சபை இனிவரும் காலங்களில் வெசாக் மற்றும் பொசன் நிகழ்வுகளுக்கு சபையிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்வதை போல் தைபொங்கல் நிகழ்வுகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று உறுதி வழங்கப்பட்டுள்ளதாக அறிய கிடைத்துள்ளது.

Related Articles

Back to top button