மலையகம்
தையல் நிலையம், பலகைக் கடை தீக்கிரை
கிரியெல்ல நகரில் ,இன்று (25) அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில், தையல் நிலையம், முற்றாக சேதமடைந்துள்ளதுடன், பலகைக்கடையும் தீப்பற்றி எரிந்து சேதமாகியுள்ளது.
இத்தீவிபத்தில், தையல் நிலையத்திலிருந்த அனைத்து தையல் இயந்திரங்களும் எரிந்து நாசமாகியுள்ளன. மேற்படி தையல் நிலையத்தில், 15 தையல் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு 20க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் தொழில் புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம், இடம்பெறும்போது, தையல் நிலையத்தினுள் எவரும் இருக்கவில்லை என கிரியெல்ல பொலிஸார் தெரிவித்தனர். பகுதியளவில் சேதமடைந்த பலகை கடை, குறித்த தையல் நிலையத்தின் அருகிலிருந்த கடையென தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து, கிரியெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.