மலையகம்

இன்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட தோட்ட தொழிலாளர்கள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களது போராட்டத்தை கைவிடுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்தாலும், மலையகத்தில் பல தோட்டங்களில் தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா, பதுளை, கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட சிலத் தோட்டங்களில் மாத்திரமே தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, நோர்வுட் – டிக்கோயா – சாஞ்சிமலை மேற்பிரிவு கிழ் பிரிவு ஆகிய தோட்ட தொழிலாளர்கள் சாஞ்சிமலை பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக டயர்களை எரித்தும் தேங்காய் உடைத்தும் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 9 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கைவிடுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேற்று ஜனாதிபதியை சந்தித்தப் பின்னர் அறிவித்திருந்தது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இந்த அறிவிப்புக்கு எதிராகவே குறித்த பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button