Breaking Newsசெய்திகள்

தொடரும் பயணத்தடை.? இராணுவத்தளபதி சற்றுமுன்னர் வெளியிட்டுள்ள தகவல்.!

தற்போது நாட்டில் அமுலில் உள்ள பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சற்றுமுன்னர் தெரிவித்தார். இதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் பயணத் தடை காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது. எனினும், நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி கூறியுள்ளார்.

அத்துடன், பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட மேலும் சில சேவைகள் இடம்பெறும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நடமாடும் வாகன மூலமான விற்பனை, ஆடைத் தொழிற்சாலைகள், முக்கிய கட்டுமான தளங்கள், கரிம உர உற்பத்தி நடவடிக்கை மற்றும் விவசாய நடவடிக்கைகள் சுகாதார வழிகாட்டுதலின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாணத்திலும், கிராமங்களில் வாரத்தில் ஒரு நாள் சந்தை நடைபெறுவதுடன் இந்த சந்தைகளில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஒன்று கூடாமல் நடத்தப்படுவதற்கு தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும். அத்தோடு பொருளாதார மத்திய நிலையங்கள் இரண்டு நாட்களுக்கு திறக்கப்படுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இதற்கான திகதியை அறிவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் கூறினார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com