செய்திகள்மலையகம்

தொடரும் உண்ணாவிரத போராட்டம் ; பலன் கிடைக்குமா.?

பொகவந்தலாவ, கொட்டியாகலை தோட்ட தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம் 2 ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த உண்ணாவிரத போராட்டம் நேற்று காலை ஆரம்பிக்கப்பட்டது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதில் இருந்து பொகவந்தலாவ, கொட்டியாகலை தோட்ட தொழிலாளர்களை நாள் ஒன்றுக்கு 18 கிலோ தேயிலை கொழுந்தினை பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் அழுத்தம் கொடுப்பதாகவும், அவ்வாறு பறிக்காத தொழிலாளர்களின் கொழுந்தை கிலோவொன்றுக்கு 40 ரூபாய் வீதம் செலுத்த நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இச் சத்தியகிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 13 கிலோ மாத்திரம் பறிக்க முடியும் என கொட்டியாகலை தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கினறர்.

தற்போதைய நிலைமையின் கீழ், பொருளாதார ரீதியாக தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளதுடன் இப்பிரச்சனைக்குத் தீர்வு கோரியே இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தொழிலாளர்கள் 13 கிலோ மாத்திரமே பறிக்கிறார்கள். இவ்வாறு குறைந்தளவில் தேயிலை கொழுந்து பறிப்பதனால் தோட்ட நிர்வாகத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் வாரத்தில் ஒரு நாள் மாத்திரம் தொழில் வழங்குமாறு எமது நிறுவனத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டது. இருந்த போதிலும் தொழிலாளர்கள் 18 கிலோ தேயிலை கொழுந்தினை கட்டாயம் பறிக்க வேண்டும் என பொகவந்தலாவ பெருந்தோட்ட நிர்வாகம் தெரிவித்ததுள்ளதாக தோட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button