காலநிலைசெய்திகள்

தொடரும் கடும் மழை : 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு.!

சீரற்ற வானிலையால், 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, காலி, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கும், களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள மற்றும் இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கும் , இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட , கலவான, அயகம, பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் 2 ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுக்கும், மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர பிரதேச செயலாளர் பிரிவுக்கும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத,கிரிஎல்ல, குருவிட்ட, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேசங்களை தவிர்ந்த அதிகூடிய மழைவீழச்சி பதிவாகக்கூடிய ஏனைய பகுதிகளில் வசிக்கும் மக்களும் மண்சரிவு அபாயம் குறித்து முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட் புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, பலத்த மழை களுகங்கையின் இங்கிரிய, ஹொரனை, மதுராவல, மில்லனிய, அகலவத்தை, பாலிந்தநுவர பகுதிகளின் தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com