தொடரும் சீரற்ற காலநிலை : சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் எச்சரிக்கை

மழையுடனான காலநிலை தொடர்ந்துள்ள நிலையில், இரத்தினபுரி , களுத்துறை, காலி, பதுளை, கேகாலை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, கலவானை மற்றும் அயகம ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் கடந்த 24 மணித்தியாலங்களாக பெய்த பலத்த மழையுடன் இவ்வாறு மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட, புளத்சிங்கள, அகலவத்தை, மத்துகம, பதுரெலிய மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 24 மணித்தியாலங்களில் அந்த பிரதேசங்களில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கடலில் கடும் காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அதாவனத்துடன் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. களுகங்கையின் நீர்மட்டம் மில்லகந்த என்ற இடத்தில் வெள்ள மட்டத்தைத் தாண்டியுள்ளது. ஜின்கங்கையின் நீர்மட்டம் பத்தேகம என்ற இடத்தில் வெள்ள மட்டத்தை அடைந்துள்ளது.