...
காலநிலைநுவரெலியாமலையகம்

தொடரும் சீரற்ற காலநிலை – நுவரெலியாவில் மீண்டும் மழை வெள்ளம்

 தற்போது நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்து நீடிப்பதனால் நுவரெலியாவில் (29 /10) இன்று மாலை பெய்த கடும் மழையினால் நுவரெலியா, பொரலந்த , கந்தபளை ஆகிய இடங்களில் உள்ள குடும்பங்கள் அதிமாக பாதிக்கப்பட்டனர்.

நுவரெலியாவில் உள்ள  லவர்சிலிப் நீர் வீழ்ச்சியில் நீர் நிலை அதிகரித்தமையால் பொரலந்த பிரதேசத்தில் உள்ள வீடுகளும், விவசாயமும்  வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையின் காரணமாக பொரலந்த ,கந்தபளை பகுதிகளில் பல வீடுகள் சேதம் அடைத்துள்ளன .

மேலும் நுவரெலியா கந்தபளை ராகலை போன்ற பகுதியில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
(செ.திவாகரன் நானுஒயா)

Related Articles

Back to top button


Thubinail image
Screen