மலையகம்

தொடரும் போராட்டம்: தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்

பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதன அதிகரிப்பை வலியுறுத்தி இன்றும் நாட்டின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொகவந்தலாவை நகரில் அந்த பகுதியில் உள்ள தோட்டப் பிரிவுகளைச் சேர்ந்த 2000இற்கும் அதிகமான மக்கள் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

குறித்த போராட்டத்திற்கு வர்த்தகர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் என்பனவும் ஆதரவளித்திருந்தன.

அத்துடன் , கலஹா – புப்புரஸ்ஸ – லெவலன் தோட்ட மக்களும், கலஹா – தெல்தோட்டம் குரூப் பகுதி மக்களும் இன்று தங்களது வேதன அதிகரிப்பை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மஸ்கெலியா – சாமிமலை – கவரவெல, சோலகந்த உள்ளிட்ட 7 தோட்டங்களைச் சேர்ந்த மக்களும் இன்று பாரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

புசல்லாவை நகரில் மெல்போட், கலுகல்ல, சோகம, ரொஸ்ச்சைல்ட், சன்குவாரி, நியுமெல்போட், நியுபீகொக், போமென்ட் ஓல்ட்பீக்கொக், சப்லி, எல்பொட, மேமலை, ப்ரொட்டொஃப், ரம்பொடை மற்றும் டெல்டா உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இந்த போராட்டத்துக்கு நகரின் வர்த்தக நிலையங்கள் கறுப்பு கொடி போடப்பட்டு ஆதரவு அளித்துள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே கோராட்டத்தில் கலந்து பொண்டு தொட்ட தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்.

அவிசாவலை – டுவென்ட்றித் தோட்ட மக்கள் – கொழும்பு – அவிசாவலை பிரதான வீதியில் – கிரிவந்தல பகுதியில் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இதேவேளை, மாத்தளை – எல்கடுவ – செம்பகவத்தையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.அந்த பகுதியில் உள்ள மூன்று தோட்டப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து மூன்று தினங்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Related Articles

35 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button