காலநிலைசெய்திகள்மலையகம்

தொடரும் மழைக் கொண்ட காலநிலை : நாட்டின் ஒரு சில பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

தற்போது நிலவுகின்ற அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் 9 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த நிலை இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட, குருவிட்ட, இரத்தினபுரி, கிரியெல்ல, எலபாத்த, பலாங்கொடை, இம்புல்பே, வெலிகேபொல மற்றும் ஓப்பநாயக்க ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரதேசங்களில் மலை சாரலை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறும் ஆய்வு அறிவித்துள்ளது.

நாட்டில் பல பிரதேசங்களில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் பலத்த மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்குதல் அபாயத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் வலிமண்டல திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com