காலநிலைசெய்திகள்

தொடர்கிறது சீரற்ற வானிலை.

இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், அதிக மழை வீழ்ச்சி வெஹரகல பகுதியில் பதிவாகியுள்ளது.

220 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி அங்கு பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மாத்தறை பகுதியில் 205.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், முல்லைத்தீவில் 108 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இன்றும் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஏனைய சில மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download