மலையகம்
தொடர்ந்தும் தோட்ட தொழிலாளர்களை குறிவைத்து கொட்டும் குளவிகள்
லிந்துலை கல்கந்தை தோட்டத்தில் தேயிலைத் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் 15.11.2017 அன்று மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இதன் போது 17 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 05 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், 12 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.