செய்திகள்

தொடர்ந்து வரும் சீரற்ற காலநிலையால் மொரகஹாகந்த, களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் நீர் மட்டம் உயர்வு

திய மலை நாட்டில் பெய்யும் கடுமையான மழை காரணமாக, மொரகஹாகந்த, களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதாக திட்டப் பணிக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 65 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக பொதுமக்கள் தொடர்பு அதிகாரி பி.ஜி. தயானந்த குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டத்தின் அளவை கருத்தில் கொண்டு 45,000 ஆயிரம் ஏக்கர் நெல் வயல்கள் நிலப்பரப்பில் பயிர்செய்வதற்காக நீர் பயன்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button