மலையகம்
தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மலையக தோட்ட தொழிலாளர்கள்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க கோரி இது வரைக்கும் எந்த விதமான தீர்வுகளும் எட்டபடாத நிலையில் தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று கண்டி மாவட்டத்தின் புப்புரஸ்ஸ டெல்டா தோட்டத்திலும் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கட்சி தொழிற்சங்க பாகுபாடு இன்றி வேலை நிருத்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளதுடன், தோட்டத்தொழிலாளர்கள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.