தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வரும் பெருந்தோட்ட தொழிலாளர்கள்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை வேதனத்தை 1000ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் மலையகத்தின் இன்றும் தொடர்ந்துள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் லிந்துலை நகரில் இருவேறு இடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை 8.30 அளவில் மட்டுக்கலை தோட்டத்தில் ஆரம்பித்து ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதி ஊடாக லித்துலை நகரை நோக்கி சென்றடைந்துள்ளது.
இதன்போது, ஆயிரத்திற்கும் அதிகமான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலயைில், டீமலை மவுசாக்கலை நோனா தோட்டம் , வளஹா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 800 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
தலவாக்கலை நகரில் இன்று முற்பகல் 9.30 அளவில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை, ஹட்டன் – பொகவந்தலாவை – மஸ்கொலியா பிரதான வீதியின் நோர்வூட் சந்தியில் போராட்டம் நடைபெற்றுள்ளது.
அதில், நோர்வூட், போற்றி, நியூடன், ஹைரபி, தரவளை ஆகிய தோட்ட தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.