காலநிலைமலையகம்

தொடர் மழை – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்.

பலத்த மழை காரணமாக களனி கங்கை, களு கங்கை, மகாவலி கங்கை, அத்தனகளு ஓயா மற்றும் கிங் கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

அத்தனகளு ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக தூனமலே பகுதியில் வௌ்ளம்  ஏற்பட்டுள்ளது.

களனி ஆற்றின் கொழும்பு நாகலகம் வீதியை அண்மித்த பகுதியில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக தாழ்நிலப்பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, கடும் மழை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இரத்தினபுரி, கேகாலை, மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில் இருந்து தற்காலிகமாக வௌியேறுமாறு இடர் முகாமைத்துவ நிலையம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, குருணாகல், பன்னல, மாகந்துர பகுதிகளை ஊடறுத்து வீசிய பலத்த காற்றினால் மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு சேதம்  ஏற்பட்டுள்ளது.
பலத்த காற்றினால் ஏற்பட்ட விபத்துக்களில் மூவர் காயமடைந்துள்ளனர்.

Related Articles

Back to top button
image download