மலையகம்

சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயர் நீக்கம் எலிபடை மக்கள் எதிர்ப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரை அட்டன் தொண்டமான் தொழிற்பயற்சி நிலையத்திலிருந்து நீக்கியமை தொடர்பாக தேசிய மட்டத்திலிருந்து சர்வதேச மட்டத்திலான எதிர்ப்பு அலைகள் தொடரும் நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களால் நோர்வூட் எலிபடை தோட்டத்தில் இன்று காலை 09.11.2017 எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.நோர்வூட் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் சுமார் 200ற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

அதே வேலை இந்தியாவில் தமிழ் நாட்டு மாநிலத்தின் அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளனர்.இந்த நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொது செயலாளர் கேப்டன் விஜயகாந்த், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் வைகோ, தமிழக மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜீ.கே. வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் விடுத்துள்ள கண்டன செய்தியில் அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரை அவரின் பெயரால் உருவாக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து நீக்கப்பட்டமை இந்தியாவிலிருந்து சென்று இலங்கை நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெழும்பாக திகழும் மலையக மக்களுக்கு அகௌரவத்தை ஏற்படுத்தும் ஒரு செயலாக எண்ணுகின்றோம் என தங்களது கண்டன அறிக்கையில் வெளிக்காட்டியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button