செய்திகள்

தொண்டர் சமூச சேவை அமைப்பு சட்டத்தில் திருத்தம்

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொண்டர் சமூச சேவை தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. 

இதற்காக கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பொது மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படுவதாக அரச சார்பற்ற அமைப்புகள் தொடர்பான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது. 

தொண்டர் அமைப்புக்களை ஒழுங்குறுத்துதல் மற்றும் கண்காணித்தல் உள்ளிட்ட பணிகள் மற்றும் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை அரச நிறுவனங்கள் ரீதியிலும், அலுவலகங்கள் மூலமும் முன்னெடுக்கப்படவுள்ளது. 

அரச சார்பற்ற அமைப்புக்கள் பல நாட்டிற்கும் சமூகத்திற்கும் முக்கியமான பணிகளை நிறைவேற்றி வருகின்றது. 
இதேபேன்று தவறான செயற்பாடுகளில் ஈடுபடும் அமைப்புக்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்த அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி திலுக்க சில்வா தெரிவித்துள்ளார். 

அரச சார்பற்ற அமைப்புக்களின் நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் பணிகளை ஒழுங்குறுத்தல் தொடர்பாகவே பணிப்பாளர் நாயகம் இந்த விடயங்களை குறிப்பிட்டார். 

Related Articles

Back to top button
image download