தொண்டைமான் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து இலங்கை அரசிடம் பேசுவோம்: ஸ்டாலின் கடிதத்துக்கு சுஷ்மா ஸ்வராஜ் பதில்
தி இந்து இணையம்
இலங்கை அரசு நிறுவனங்களில் இருந்து தமிழர் தலைவர் சவுமியமூர்த்தி தொண்டைமான் பெயர் நீக்கப்பட்டது தொடர்பாக இலங்கை அரசிடம் பேசுவோம் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அமைச்சர், அரசியல் சட்டத் திருத்தக் குழுவின் உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த மலையகத் தமிழர்களின் தலைவர் சவுமியமூர்த்தி தொண்டைமானின் பெயரை அரசு நிறுவனங்களில் இருந்து இலங்கை அரசு நீக்கியுள்ளது.
இது தொடர்பாக சுஷ்மா ஸ்வராஜூக்கு கடிதம் அனுப்பிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தொண்டைமான் பெயர் நீக்கப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு மீண்டும் அவரது பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியிருந்தார்.
அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள சுஷ்மா ஸ்வராஜ், ”தொண்டைமான் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து இலங்கை அரசிடம் பேசுவோம்” என தெரிவித்துள்ளார்.