செய்திகள்

“தொற்றுக்குள்ளானவர்கள் குணமடைவதற்கு முன்பு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டாம்”

கொரோனா தொற்றிலிருந்து குணமடைவதற்கு முன்பு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டாம் என சுகாதார அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்த வரும் சிலர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் தடுப்பூசி செலுத்துவதால் எந்த ஒரு பயனும் இல்லை. எனவே கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள், குணமடைந்து மிக நீண்ட நாட்களுக்குக் காத்திருக்காமல், 14 நாட்களுக்குப் பின்னர் தடுப்பூசி செலுத்த பரிந்துரைக்கப்படுகிறது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மீண்டும் ஓர் அலை ஏற்படாது தடுக்க சுகாதார வழிகாட்டுதல்களையும் நடைமுறைகளையும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டினை முழுமையாக திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதேநேரம் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவும் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button