தொழில்நுட்பம்

தொலைந்துபோன கையடக்க தொலைபேசிகளை கண்டுபிடிக்க இணையத்தளம்.

 தொலைந்துபோன மொபைல்கள் தொடர்பில் அதிகரித்துவரும் முறைப்பாடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு புதியதொரு இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த  இணையத்தளம் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால்ஆரம்பித்து வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதில் தொலைந்துபோன உங்கள் மொபைல் போன்கள் தொடர்பில் புகார் செய்ய முடியும்.

இதில் நீங்கள் முறைப்பாடு செய்ததன் பின்னர் அது உடனடியாக “தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகம்,” “போலீஸ் நிலையம்,” மற்றும் “சம்பத்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனம்” போன்றவற்றுக்கு அனுப்பி வைக்கப்படும்.

நாம் இங்கே வழங்கியுள்ள இணைப்பு மூலம் குறிப்பிட்ட இணையதளத்திற்கு செல்ல முடியும்.

குறிப்பிட்ட தளத்தில் நீங்கள் புகார் செய்வதற்கு முன்பு உங்கள் அடையாள அட்டை இலக்கத்தை வழங்கி இலவச கணக்கு ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் தொலைந்துபோன உங்கள் மொபைல் போன் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும்.

இலங்கையில் 24 மில்லியனுக்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் பயன்பாட்டில் உள்ளன. இது இலங்கையின் சனத்தொகையை விட சுமார் 30 மில்லியன்கள்அதிகமாகும். திருப்பட்ட அல்லது தொலைந்துபோன மொபைல்-கள் தொடர்பில் ஒரு நாளைக்கு 800-1000 வரையிலான முறைப்பாடுகள் போலீசில் பதியப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த புதிய சேவை இலங்கையர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

நீங்களும் குறிப்பிட்ட இணையதளத்திற்குச் செல்ல விரும்பினால் இங்கே சுட்டுக.

http://www.ineed.police.lk/

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button