
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுத் தொடர்பில் நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறும், இது தொடர்பான அடுத்தகட்ட கலந்துரையாடலுக்கான திகதியினை உடனடியாக அறிவிக்குமாறும் கோரி முதலாளிமார் சம்மேளனத்துக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பான கோரிக்கைகள் உள்ளடங்கிய கடிதத்தை நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ{ம், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கமும் இணைந்து அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.