தொழிலாளர்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் வகையில் தொழில் திணைக்கள கட்டடம் அமைய வேண்டும்

தோட்ட தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்கும் இடையிலான பிணக்குகளை தீர்த்துக்கொள்ளும் வகையில் ஹட்டனில் உருவாக்கப்படும் தொழில் திணைக்கள கட்டடம் அமைய வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் மூன்று மாடிகளை கொண்ட தொழில் திணைக்கள கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
தோட்ட தொழிலாளர்களுக்கும், நிர்வாகங்களுக்குமிடையில் ஏற்படக் கூடிய தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாக அதிகாரிகள் உடன் தரகர்கள் ஊடாகவே பேசப்பட்டு வருகின்றது.
தொழிலாளர்களுக்கு சிங்கள மொழி தெரியாத காரணத்தினால் இந்த நிலை ஏற்படுள்ளதாகவும், எதிர்வரும் காலத்தில் தரகர்கள் அற்ற பேச்சுவார்த்தையை ஹட்டன் தொழில் திணைக்களத்தின் ஊடாக தொழிலாளர்களும் தோட்ட அதிகாரிகளும் தீர்த்துக் கொள்ள வழிசமைக்க வேண்டும்.
இந்த நிலையில், தரகர்கள் ஊடாக தோட்ட அதிகாரிகளிடம் பேசப்பட்டு வரும் தொழிலாளர்கள் பிரச்சினைகளை பேச்சுவார்த்தையில் ஈடுப்படும் தரகர்கள் அவர்களின் இலாபத்திற்காக பேசப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.