...
செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட தீபாவளி முற்பணத்தை வழங்க வேண்டும்..

தோட்டத் தொழிலாளர்களுக்கு 10ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட தீபாவளி முற்பணத்தை வழங்குவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென எஸ்.ஆனந்தகுமார் எடுத்துரைப்பு –


சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல் குறித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (22.10.2021) கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் பிரதித் தலைவர்; ருவான் விஜேவர்தன தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய உட்பட ஐ.தே.கவின் உயர்மட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, எதிர்வரும் மாகாண சபை தேர்தலை எதிர்கொள்ளுதல் மற்றும் தேர்தலுக்கான உத்திகளை கையாளுதல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆழமான கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு பத்தாயிரத்துக்கு மேற்பட்ட தொகையை வழங்குவதற்காக கம்பனிகளுக்கு தொழிற்சங்க ரீதியில் பாரிய அழுத்தத்தை கொடுக்க வேண்டுமென இதன்போது, எஸ்.ஆனந்தகுமார் வலியுறுத்தியதுடன், தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக கம்பனிகள் மேற்கொண்டுவரும் அழுத்தங்கள் குறித்து கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen